
ஆதார் அட்டை என்றால் என்ன? ஆதார் அட்டை எதற்கு முக்கியம்?
இந்தியாவில் வழங்கப்படும் ஆதார் எண் என்பது UIDAI ஆல் வழங்கப்பட்ட 12 இலக்க சீரற்ற எண் ஆகும். இந்தியாவில் வசிக்கும் மக்கள் வயது மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் தானாக முன் வந்து ஆதார் எண்ணைப் பெற முடியும். இதற்காக பதிவு செய்ய விரும்பும் நபர் சேர்க்கை செயல்பாட்டின் போது குறைந்தபட்ச மக்கள்தொகை மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டும். இந்த சேவை முற்றிலும் இலவசம் ஆகும். ஒவ்வொரு தனிநபரும் ஒரு முறை மட்டுமே ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் மற்றும் நகல் நீக்கம் செய்யப்பட்ட பிறகு ஒரே ஒரு ஆதார் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும், ஏனெனில் மக்கள்தொகை மற்றும் பயோமெட்ரிக் டி-நகல் செயல்முறை மூலம் இது தனித்துவம் அடைகிறது.
ஆதார் என்பது சமூக மற்றும் நிதி சேர்க்கை, பொதுத்துறை விநியோக சீர்திருத்தங்கள், நிதி வரவு செலவுத் திட்டங்களை நிர்வகித்தல், வசதிகளை அதிகரித்தல் மற்றும் தொந்தரவில்லாத மக்கள்-சார்ந்த நிர்வாகத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய கொள்கை கருவியாகும். ஆதாரை ஒரு நிரந்தர நிதி முகவரியாகப் பயன்படுத்தப்படலாம் மற்றும் சமூகத்தின் பின்தங்கிய மற்றும் பலவீனமான பிரிவினரை நிதி சேர்க்கைக்கு உட்படுத்த உதவுகிறது. ஆதார் அடையாள தளம் ‘டிஜிட்டல் இந்தியா’வின் முக்கிய தூண்களில் ஒன்றாகும், இதில் நாட்டின் ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் தனித்துவமான அடையாளம் வழங்கப்படுகிறது.
ஆதார் திட்டம் ஏற்கனவே பல மைல்கற்களை எட்டியுள்ளது மற்றும் உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடிப்படையிலான அடையாள அமைப்பு ஈனும் அந்தஸ்தை பெற்றுள்ளது. ஆதார் எண் அடையாளச் சான்று என்ற அந்தஸ்தை பெற்றிருந்தாலும், ஆதார் எண் வைத்திருப்பவரைப் பொறுத்தவரையில் அது குடியுரிமை அல்லது குடியிருப்புக்கான எந்த உரிமையையும் அளிக்காது. தனித்தன்மை, அங்கீகாரம், நிதி முகவரி மற்றும் e-KYC ஆகியவற்றுடன் கூடிய ஆதார் அடையாள மேடை, குடியிருப்பாளரின் ஆதார் எண்ணை மட்டுமே பயன்படுத்தி பல்வேறு மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகளை நாடு மக்களுக்கு நேரடியாக வழங்குவதில் இந்திய அரசுக்கு உதவுகிறது.
இந்திய அரசாங்கத்தால் ஒவ்வொரு தனி நபருக்கும் வழங்கப்படும் ஆதார் அட்டையை அடையாளாச் சான்றாக பல இடங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆதார் அட்டை பெறும் போது ஒரு முகவரியில் குடியிருந்து பின்னர், வேறு முகவரிக்கு மாறி இருந்தால், உங்கள் முகவரி மாற்றத்தை புதுப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஆதார் அட்டையில் உள்ள முகவரியை தற்போது ஆன்லைன் மூலமாக எளிதாக மற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
பல்வேறு திட்டங்களின் கீழ் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் பல நன்மைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை இந்தியாவில் மிகவும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. அதனால் அதன் மூலம் கிடைக்கக்கூடிய பல நன்மைகளைப் பெற, ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை புதுப்பிக்க வேண்டும். நீங்கள் இடமாற்றம் ஆகி உங்கள் முகவரியை உங்கள் ஆதார் அட்டையில் புதுப்பிக்க விரும்பினால், இந்திய தனித்துவ அடையாள ஆணைய (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் தங்கள் முகவரியை புதுப்பித்துக் கொள்ள சமீபத்தில் பயனர்களை அனுமதிக்கிறது. அதனை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை மற்றும் செயல்முறை பற்றி இங்கு நாம் காணலாம்.
ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்ற தேவைப்படும் ஆவணங்கள்:
ஆதார் அட்டை பயனாளர்கள் ஆன்லைனில் தங்கள் முகவரியை மாற்ற தங்கள் KYC ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 32 சான்றுகளை இதற்காக அடையாள சான்றாக பயன்படுத்தலாம் என நிர்ணயம் செய்து உள்ளது. அந்த சான்றுகள் என்னென்ன என்பதை கீழே நாம் வரிசையாக காணலாம்.
- பாஸ்போர்ட்
- பான்கார்டு
- ரேஷன்/ பிடிஎஸ் புகைப்பட அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- ஓட்டுனர் உரிமம்
- அரசு புகைப்பட அடையாள அட்டைகள்/ சேவை புகைப்பட அடையாள அட்டை (பொதுத்துறை நிறுவனத்தால் வழங்கப்பட்டது)
- NREGS வேலை அட்டை
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை
- ஆயுத உரிமம்
- புகைப்படத்துடன் கூடிய வங்கி ஏ.டி.எம் கார்டு
- புகைப்பதத்துடன் கூடிய வங்கி கிரெடிட் கார்டு
- ஓய்வூதியதாரர் புகைப்பட அடையாள அட்டை
- சுதந்திர போராளி புகைப்பட அடையாள அட்டை
- புகைப்படத்துடன் கூடிய கிசான் கணக்கு புத்தகம்
- CGHS/ ECHS புகைப்பட அடையாள அட்டை
- தபால் துறையால் வழங்கப்பட்ட பெயர், புகைப்படம், முகவரி கொண்ட அடையாள அட்டை
- புகைப்படத்துடன் கூடிய UIDAI தரச்சான்றிதழ் வடிவத்தில் கெஜட்டட் அதிகாரிகள் அல்லது தாசில்தார் வழங்கிய அடையாள அட்டை
- மாநில அரசால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை/ ஊனமுற்ற மருத்துவ சான்றிதழ்
- ராஜஸ்தான் மாநில அரசு வழங்கிய பாமாஷா அட்டை / ஜன-ஆதார் அட்டை
- UIDAI -ஆல் ஆதார் பதிவுக்காக நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் அங்கீகரிக்கப்பட்ட தங்குமிடங்கள் அல்லது அனாதை இல்லங்களின் கண்காணிப்பாளர்/ வார்டன்/ மேட்ரான்/ தலைவரின் கையொப்பம் பெற்ற சான்றிதழ்.
- UIDAI தரத்தில் எம்.பி. அல்லது MLA அல்லது MLC அல்லது நகராட்சி கவுன்சிலர் ஆகியோர் ஆதார் பதிவுக்காக வழங்கிய சான்றிதழ்.
- UIDAI தரத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர் அல்லது அதற்கு சமமான அதிகாரம் உடைய நபர்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ்
- பெயர் மாற்றத்திற்கான அரசிதழ் அறிவிப்பு நகல்
- புகைப்படத்துடன் கூடிய திருமண பதிவு சான்றிதழ்
- ஆர்.எஸ்.பி.ஒய் அட்டை
- புகைப்படத்துடன் கூடிய எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் சான்றிதழ்
- புகைப்படத்துடன் கூடிய ST/ SC/ OBC சான்றிதழ்
- பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட பள்ளியை விட்டு வெளியேறும் சான்றிதழ் (SLC)/ பள்ளி இடமாற்றம் சான்றிதழ் (TC).
- பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட பள்ளித் தலைவரால் வழங்கப்பட்ட பள்ளி பதிவுகளின் சான்று.
- பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம்
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவன தலைவரால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட்ட பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ்
- ஊழியர் சேமலாப நிதியத்தால் வழங்கப்பட்ட பெயர், DOB மற்றும் புகைப்படம் அடங்கிய அடையாளச் சான்றிதழ்
ஆதார் அட்டையில் முகவரியை மாற்றும் வழிமுறைகள்:
ஆதார் அட்டை முகவரியை ஆன்லைனில் மாற்றுவதற்கான படிப்படியான வழிகாட்டி இதோ:
- ssup.uidai.gov.in/ssup/ என்ற UIDAI இணையதள முகவரியில் உள்நுழைக.
- ‘ஆதார் புதுப்பிக்க தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- 12 இலக்க UID எண்ணை உள்ளீடு செய்யவும்.
- பாதுகாப்பு குறியீடு அல்லது கேப்ட்சா குறியீட்டை உள்ளீடு செய்யவும்.
- ‘OTP அனுப்பு’ விருப்பத்தை தேர்வு செய்யவும்.
- ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்களுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
- OTP பெற்ற பிறகு அந்த OTP ஐ உள்ளீடு செய்யவும்.
- பின்னர் ‘உள்நுழைவு’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் விவரங்கள் இப்போது திரையில் காட்டப்படும். உங்கள் ஐடி மற்றும் முகவரி சான்றுக்கு ஆதரவாக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட 32 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். முகவரியை மாற்ற முகவரி சான்றின் ஸ்கேன் நகலை பதிவேற்றம் செய்த பின்னர் சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.
இந்த செயல்முறைகளுக்கு பின்னர் உங்கள் ஆதார் அட்டை முகவரி ஆன்லைனில் மாற்றப்படும். ஆதார் அட்டை முகவரி மாற்றம் நிலையை நீங்கள் சரிபார்த்து ஆதார் அட்டை முகவரி மாற்றத்தை உறுதி செய்து கொள்ளலாம்.