பட்டம் விடுவது என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விஷயம் ஆகும். பல வண்ணங்களில் வித விதமாக பட்டங்களை தயார் செய்து குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ பறக்க விடும் போது பட்டத்துடன் சேர்ந்து நம் மனமும் சிறகடித்து பறக்கும் என்பது உண்மை. அந்தக்கால தலைமுறையினரின் பொழுது போக்கு அம்சங்களில் முக்கியமான ஒன்றாக விளங்கிய பட்டம் விடுதல் பற்றி தற்கால தலைமுறையினர் அறிந்திருப்பதே மிகவும் அரிது தான்.
சர்வதேச பட்டம் விடும் திருவிழா:
குஜராத்தில் 1989 – ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சர்வதேச பட்டம் விடும் திருவிழா கொண்டாடப்படுகிறது. இது உத்தராயன் அல்லது மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள பல நகரங்களில் இந்த சர்வதேச பட்டம் விடும் திருவிழா கொண்டாடப்பட்டாலும், அகமதாபாத்தில் நடைபெறும் பட்டம் விடும் திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். ரஷ்யா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, போலந்து, ஜப்பான், இத்தாலி, பிரேசில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா, பிரான்ஸ், சீனா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 35 முதல் 40 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பட்டம் பறக்க விடும் நிபுணர்களால் இந்த விழா
உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து பட்டம் தயாரிப்பது ஒரு அற்புதமான கற்றல் அனுபவமாகும். மேலும் அவர்களுடன் சேர்ந்து பட்டத்தை பறக்க விடுவதும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் ஆகும். பட்டம் எப்படி செய்வது என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உண்மையில் அது மிகவும் எளிதான விஷயம் தான். இங்கு நாம் செய்தித்தாளை கொண்டு எளிமையான முறையில் எவ்வாறு பட்டம் செய்யலாம் என்பதை பற்றிக் காணலாம்.
பட்டம் தயார் செய்ய தேவையான பொருட்கள்:
- ஒரு பக்க முழு செய்தித்தாள் (அல்லது) மெல்லிய வண்ணத்தாள்
- இரண்டு 1/4 அங்குல அகல மரக்குச்சிகள் (ஒரு 24 அங்குலம், ஒரு 20 அங்குலம்)
- கத்தரிக்கோல்
- பென்சில்
- மெல்லிய நூல் கயிறு
- மாஸ்கிங் டேப் அல்லது பேக்கிங் டேப்
- அளவுகோல்
- நூல் அல்லது ரிப்பன்கள்
- சிறிய கை பிளேடு
பட்டம் தயாரிப்பதற்கான வழிமுறைகள்:
- நீங்கள் எடுத்து வைத்துள்ள இரண்டு மரக்குச்சிகளை சரியான நீளத்திற்கு (ஒன்று அங்குலம், ஒன்று அங்குலம்) வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
- பின்னர் அந்த இரண்டு மரகுச்சிகளின் இரு முனைகளிலும் சிறிய கை பிளேடை பயன்படுத்தி குறுக்கே நூல் அல்லது கயிறு கட்டும் அளவு வெட்டிக்கொள்ளவும்.
- 24 அங்குல மரக்குச்சியை செங்குத்தாக வைத்து, மேலே இருந்து 6 அங்குலம் அளவிட்டு அதனை பென்சிலால் குறித்து வைத்துக் கொள்ளவும். அந்த குறித்து வைத்த இடத்தின் குறுக்கே மற்றொரு 20 அங்குல மரக்குச்சியை வைத்து சிலுவை வடிவத்தை உருவாக்கவும். பின்னர் இரண்டு குச்சிகளும் சந்திக்கும் இடத்தில் அவற்றை ஒன்றாக இணைத்து கட்டவும்.
- பின்னர் ஒவ்வொரு குச்சியின் முனையிலும் உள்ள வெட்டப்பட்ட இடத்துக்குள் நூல் அல்லது கயிறை விட்டு அனைத்து முனையின் வழியாகவும் விட்டு கடைசியாக ஒன்றிணைத்து கட்டவும். இப்போது பட்டம் செய்ய தேவையான உட்புற பிரேம் தயாராகிவிட்டது.
- இப்போது இந்த பிரேமின் மீது செய்தித்தாளை வைத்து வைத்து அளந்து அதனை பசை கொண்டு நன்றாக ஒட்டி விடுங்கள். செய்தித்தாளுக்கு பதிலாக வண்ண தாள்களையும் வைத்து ஒட்டிக்கொள்ளலாம்.
- பின்னர் பட்டத்தின் மேல் முனையிலும், கீழ் முனையிலும் சிறு துவாரங்கள் ஏற்படுத்தி அதன் வழியாக நூல் அல்லது மெல்லிய கயிறை நுழைத்து கட்டிவிட்டால் போதும் பட்டம் தயார்.வ இப்போது பட்டத்தின் முனைகளில் சிறிது வண்ண ரிப்பன்களை கட்டி தொங்க விடலாம். இப்போது அதனை நீண்ட நூலின் முனையில் கட்டி வைத்து, கைகளில் நூலின் பிடியை வைத்துக் கொண்டு பட்டத்தை அங்கும் இங்கும் அழகாக பறக்க விடலாம்.
பட்டம் விட்டு எப்படி விளையாடுவது?
ஒவ்வொருவரும் தாங்கள் செய்து வைத்துள்ள பட்டத்தை தங்கள் கைகளில் வைத்த படி வீட்டின் மொட்டை மாடியில் ஒன்றாக நின்றபடி வானத்தில் பறக்கவிடலாம். கற்று வேகமாக அடிக்கும் போது, காற்றின் வேகத்தால் உந்தப்பட்டு பட்டம் மேலே எழும்பி பறக்கும். அப்போது நூலை சுண்டி இழுத்து பட்டத்தை அங்கும் இங்குமாக மாற்றி மாற்றி பறக்க விடலாம். இதில் சுவாரசியம் சேர்க்கும் விதமாக யாருடைய பட்டம் அதிக உயரம் பறக்கிறது என்ற போட்டி முனைப்புடனும் பட்டம் பறக்க விடலாம்.
பட்டம் பறக்க விடுவதின் பயன்கள்:
1. கண் பார்வை தூண்டுதல்:
மொபைல் போன்கள் மற்றும் கணினித் திரைகளை நாம் தொடர்ந்து பயன்படுத்துவதால், நம் கண்கள் சோர்வடைந்து போகலாம். பட்டம் விடும் போது இனிமையான நீல வானத்திற்கு எதிராக நின்று கொண்டு தொலைதூர பொருளின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் கண்ணில் ஏற்படும் அழுத்தம் குறைந்து கண் பார்வை தெளிவாகிறது.
2. கழுத்து / தோள்பட்டை உடற்பயிற்சி :
கட்டில் அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டு மொபைல் போன்கள், நவீன சாதனங்களில் கவனம் செலுத்துவதால் தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதி பாதிக்கப்படலாம். பட்டம் பறக்க விடும் போது கழுத்து மற்றும் தோள்பட்டை முறையாக செயல்படும்.
3. மன அழுத்த நிவாரணி:
பட்டம் பறக்க விடுவது மனதிற்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்தை தருகிறது. திறந்த வெளியில், நீல வானத்தை நோக்கி ஒரு பட்டம் நகர்வதைப் பார்க்கும் போது, ஒருவரின் மன அழுத்தம் வெகுவாக குறைகிறது.
4. இயற்கையுடன் இணைதல்:
திறந்த வெளியில் நின்று வானத்தில் இருக்கும் விண்மீன் கூட்டங்களையும், ஒளிரும் நிலவின் இயற்கை அழகையும் கண்டு மகிழ உதவுகிறது. இதனால் இயற்கையுடன் இணையும் மனநிலை உண்டாகிறது.
5. புதிய காற்று:
பட்டம் விடும் போது வான்வெளிவயில் இருந்து வரும் தூய மற்றும் போதுமான புதிய காற்று உங்கள் உடம்பிற்கு தெம்பு அளிக்கிறது.