கர்ப்பிணி பெண்கள் மெனுவில் நிறைய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சத்தாக மற்றும் ஆரோக்கியமாக விளங்கும் பானங்களில் ஒன்றாக தக்காளி சாறு என்று கருதப்படுகிறது.
கர்ப்ப காலத்தில்., கர்ப்பிணிப் பெண் தக்காளி சாறு குடிக்கலாமா?
கர்ப்ப காலத்தில் உணவில் தக்காளியை பயன்படுத்தக்கூடாது என்று மருத்துவர்கள் முன்னர் வாதிட்டனர். வல்லுநர்கள் இந்த பிரச்சினையில் பல ஆண்டுகளாக பணியாற்றி, அறியப்படாத புதிய உண்மைகளை நிரூபித்து உள்ளனர். தக்காளியில் இருந்து கிடைக்கும் சாற்றில் நிறைய உப்பு மற்றும் அமிலம் இருப்பதாக பல வருடங்கள் வரை நம்பப்பட்டது, இது சிறுநீரகங்களுக்கு மோசமானது என்றும், இதன் காரணமாக, நீர் மற்றும் உப்பு வளர்சிதை மாற்றம் மட்டுமல்ல, சிறுநீரகத்தின் சுரப்புக்கு எதிர்மறையான விளைவும் ஏற்படுகிறது என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் இதுபற்றி மேற்கொள்ளப்பட்ட ஒரு முழுமையான பகுப்பாய்வின் அடிப்படையில், வருங்காலத் தாய்மார்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தக்காளி சாற்றினை குடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக பழங்களின் சாறு குடிக்க வேண்டும் என்ற விருப்பம் தோன்றும், பெரும்பாலும் இதுபோன்ற தேவை முதல் மாதங்களில் தோன்றும், ஏனெனில் இந்த காலகட்டத்தில் புதிய உயிரின் உடல், கர்ப்பிணி பெண்ணின் உடலுக்குள் வளர்ந்து புதியதாகப் பழகுகிறது. ஆரம்ப மாதங்களில், உடலில் நியூரான்களின் பிரிவு நடைபெறுவது மட்டுமல்லாமல், நஞ்சுக்கொடி வளர்ச்சியடைகிறது. இந்த நேரத்தில், பெரும்பாலும் ஒரு பெண் டாக்ஸீமியா மற்றும் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு ஆகியவற்றை அனுபவிக்க நேரிடலாம். பெண்ணின் உடலுக்குள், கருப்பைக்குள் புதிதாக நஞ்சுக்கொடி உருவாகிறது. ஆகவே இதுபோன்ற அதிகப்படியான பொருட்கள் உடலில் இருந்து வெளிவருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி இந்த செல்வாக்கிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தொடங்குகிறது. காக்ரிஃப்ளெக்ஸின் போது, கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்து உப்புகள் மற்றும் அமிலங்கள் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் இருந்து வெளியேறுகின்றன, இது அவர்களின் உடலில் நீர்-உப்பு சமநிலையை மாற்றுகிறது. எனவே, ஒரு கர்ப்பிணிப் பெண் தக்காளி சாற்றை தேவையான அளவு பருகலாம், ஏனெனில் இது அவர்களுக்கு ஏற்படும் அதிகப்படியான தாகத்தை தீர்க்கிறது.
கூடுதலாக, தக்காளியில் உள்ள பாலிசாக்கரைடுகள், குடலை முழுமையாக ஆக்கிரமித்து அதில் உள்ள இரைப்பைக் குழாயின் ஒட்டுமொத்த நிலையை இயல்பாக்குகின்றன. இதன் காரணமாக கர்ப்பிணி பெண் தக்காளி சாறு பருகுவது நன்மை பயக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. என்றாலும் கூட தக்காளி சாறை மிதமாக குடிக்கும் போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
கர்ப்ப காலத்தில் தக்காளிச் சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
தக்காளி பார்க்க அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும். இதனை உணவின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளும் போது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். தக்காளி சாப்பிடுவதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் பற்றி இங்கு நாம் காணலாம்.
1. வைட்டமின்கள் ஏ மற்றும் சி:
ஒரு நடுத்தர அளவிலான தக்காளியில் கிட்டத்தட்ட 40% வைட்டமின் சி மற்றும் 20% வைட்டமின் ஏ ஆகியவற்றை வழங்குகிறது. இதில் வைட்டமின் கே, பொட்டாசியம், இரும்பு மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்களும் நிரம்பி உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான கரு வளர்ச்சிக்கு முக்கிய தேவையாக விளங்குகிறது.
2. கலோரிகள்:
நீங்கள் சுமக்கும் கூடுதல் எடை காரணமாக, கர்ப்ப காலத்தில் சோர்வாகவும் சோம்பலாகவும் இருப்பது பொதுவான விஷயம் ஆகும். தக்காளியில் உள்ள அதிகப்படியான கலோரி எண்ணிக்கை கர்ப்ப காலத்தில் தேவைப்படும் போதுமான ஆற்றலை அளிக்கிறது மற்றும் சோம்பலைக் குறைக்கிறது.
3. நார்ச் சத்து:
தக்காளியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது. நார்ச்சத்து மலச் சிக்கலை தடுக்கிறது. மேலும் அது மென்மையான செரிமான தசைகளின் பெரிஸ்டால்டிக் இயக்கங்களை ஊக்குவிக்கிறது மற்றும் உடலுக்கு தேவையான செரிமான சாறுகளைத் தூண்டுகிறது.
4. பொட்டாசியம்:
தக்காளியை தவறாமல் உட்கொள்வது உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கும், அதாவது, பிரீக்ளாம்ப்சியா எனப்படும் கர்ப்ப காலத்தில் பொதுவானதாக ஏற்படக்கூடிய பாதிப்பை குறைக்கிறது. தக்காளியில் உள்ள பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதயத்தின் அழுத்தத்தை குறைக்கிறது.
5. ஆக்ஸிஜனேற்றிகள்:
தக்காளியில் லைகோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது, இது புற்றுநோயை உண்டாக்கும் நிலைமைகளுக்கு எதிராக போராட உதவுகிறது.
6. கொழுப்பைக் குறைக்கிறது:
இதயத்தைப் பாதுகாக்க உதவும் சீரம் லிப்பிட்களின் ஆக்சிஜனேற்றத்தை லைகோபீன் தடுக்கிறது. இது இரத்தத்தில் எல்.டி.எல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்களின் அளவைக் குறைக்க உதவுகிறது.
7. ஃபோலிக் அமிலம்:
ஃபோலிக் அமிலத்தின் ஆர்.டி.ஏவை சந்திக்க தக்காளி உங்களுக்கு உதவுகிறது. குழந்தைகளில் மூளை மற்றும் முதுகெலும்புகளின் பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தை குறைக்க ஃபோலிக் அமிலம் தேவைப்படுகிறது. எனவே தக்காளியை உண்பதன் மூலம் உடம்பிற்கு தேவையான ஃபோலிக் அமிலம் கிடைக்கிறது
9. வைட்டமின் ஈ:
வைட்டமின் – ஈ சத்துக்கள் கொண்ட தக்காளி சாற்றை மேற்பூச்சாக பயன்படுத்துவதால், வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.
தக்காளியின் நன்மை பற்றி உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையென்றால் அல்லது ஒரு நாளுக்கு எவ்வளவு தக்காளி உட்கொள்வது என்று உறுதியாக தெரியவில்லை என்றால், மேலும் அதுபற்றி தெரிந்து கொள்ள ஒரு உணவியல் நிபுணரிடம் கலந்தாலோசிக்கலாம்.
தக்காளி சாறு பருகுவதால் ஏற்படக்கூடிய தீங்குகள் மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- ஒரு பெண், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு, கடுமையான கோலிசிஸ்டிடிஸ், நாள்பட்ட கணைய அழற்சி, வயிற்றுப் புண் அல்லது இரைப்பை அழற்சி போன்ற வடிவங்களில் வயிறு அல்லது குடல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், கர்ப்ப காலத்தில் இந்த வியாதிகள் அனைத்தும் மோசமடையக்கூடும். இதன் காரணமாக, தக்காளி சாற்றை மிகவும் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம், ஏனெனில் நோயின் பாதிப்பு அதிகரிக்க கூடும்.
- ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தால் அவளுக்கு தக்காளி சாறு தீங்கு விளைவிக்கும். பானத்தின் கலவையில் அதிக எண்ணிக்கையிலான உப்புகள் மற்றும் அமிலங்கள் நெஃப்ரானின் நிலையான செயல்பாட்டை சீர்குலைக்கும், குறிப்பாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் இதனால் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும்.
- நீண்டகால ஒவ்வாமை வரலாற்றைக் கொண்ட எதிர்கால தாய்மார்களுக்கு தக்காளி சாற்றின் தீங்கை முன்னிலைப்படுத்த வேண்டியது அவசியம். சிவப்பு நிறத்தில் இருக்கும் பொருட்களால் ஒரு பெண்ணுக்கு ஒவ்வாமை இருந்தால், நிச்சயமாக, அந்த பெண்ணால் தக்காளி சாறு எடுக்க முடியாது. இதுதவிர வேறு ஏதாவது ஒவ்வாமை எதிர்வினை இருந்தால், தக்காளி சாறை மேலும் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தக்காளி சாறு பருகுவதால் அதிக நன்மை பெறுவது எப்படி?
தக்காளி சாறு எவ்வளவு பயனுள்ளதாகவும், சத்தானதாகவும் இருந்தாலும், அதை எடுத்துக் கொள்ளும் போது சில விதிகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இது பானத்திலிருந்து அதிக நன்மைகளைப் பெறவும், குணப்படுத்தும் விளைவைப் பெறவும் உதவும்.
மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கர்ப்பிணிப் பெண்களை பின்வரும் விதிகளைக் கடைப்பிடிக்க பரிந்துரைக்கின்றனர்:
- தக்காளி சாறு ஸ்டார்ச் கொண்ட உணவுகளுடன் எடுத்துக்கொள்ள பொருந்தாது. எடுத்துக்காட்டாக, உருளைக்கிழங்குடன் தக்காளிச்சாறு எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த இரண்டு உணவுகளையும் ஒரே நேரத்தில் உட்கொள்வது யூரோலிதியாசிஸுக்கு வழிவகுக்கும்.
- பானத்தின் சுவையை மேம்படுத்த, கீரைகள் அல்லது நறுக்கிய பூண்டு வகைகளை சேர்க்கலாம். உப்பு அல்லது சர்க்கரை சேர்க்காமல் தக்காளி சாறு எடுத்துக் கொள்வது நல்லது.
- தக்காளி சாறை காய்கறி சாலட் உடன் உட்கொள்ள மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அதில் உள்ள சீஸ், மூலிகைகள் மற்றும் சூரியகாந்தி எண்ணெயுடன் பதப்படுத்தப்படுவதால், இந்த தயாரிப்புகள் அனைத்தும் உடலால் முழுமையாக உறிஞ்சப்படுகின்றன.
- தக்காளி சாற்றை பிழிந்து வைத்த பின்னர் அது இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது. இந்த நேரத்திற்குப் பிறகு, பானம் அதன் பயனுள்ள குணங்களை இழக்கிறது.
- வீட்டில் புதிதாக தயார் செய்யப்படும் தக்காளி சாற்றில் உப்பு மற்றும் இனிப்பு சுவை சேர்க்காமல், புதினா மற்றும் மல்லி இலை போன்ற பச்சை இலைகளை சேர்த்து அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
கர்ப்ப காலத்தில் தக்காளி சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நிறைய சொல்ல முடியும், ஏனெனில் இது ஒரு முதன்மையான இயற்கை தயாரிப்பு ஆகும். இந்த தயாரிப்பின் அனைத்து ரகசியங்களும் அதன் கலவையில் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். தக்காளி சாறு மற்ற பழ வகைகளை போலவே புதியதாக தயாரித்து மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக ஒரு கர்ப்பிணிப் பெண் அல்லது ஒரு பாலூட்டும் தாய்க்கு புதிதாக தயார் செய்யப்பட்ட தக்காளி சாறு வழங்குவதே நன்மை பயக்கும். எனவே கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடல் நிலையை அனுசரித்து, தக்காளி சாறை அளவாக பருகலாம்.