படி 1: முதலில் பிளே-ஸ்டோரில் இருந்து “கூகிள் பே” செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது “கூகிள் பே” செயலியைத் திறக்கவும்.
படி 2: மேல் வலது மூலையில் காணப்படும் மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்க.
படி 3: இப்போது ஒரு புதிய பக்கம் தோன்றும், அங்கே ‘கட்டண முறைகள்’ என்பதை தட்டவும்.
படி 4: இது உங்களை மீண்டும் ஒரு புதிய பக்கத்திற்கு வழிநடத்தும். அங்கு ‘வங்கி கணக்கைச் சேர்’ என்பதைக் கிளிக் செய்க.
படி 5: வங்கி பெயர்கள் கொண்ட பட்டியல் ஒன்று காணப்படும், அந்த பட்டியலிலிருந்து உங்கள் ‘வங்கி பெயரை’ தேர்வு செய்யவும்.
படி 6: உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்த பிறகு, ஒரு பாப்-அப் தோன்றும், அதில் ‘அனுமதி’ என்பதைத் தட்டவும்.
படி 7: பின்னர் கணக்கு இணைப்பைக் காட்டும் மற்றொரு பாப்-அப் தோன்றும், அதில் ‘சரி’ என்பதைக் கிளிக் செய்க.
படி 8: இப்போது வங்கியில் பதிவு செய்யப்பட்ட உங்கள் கைப்பேசி எண்ணுக்கு சரிபார்ப்பு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். அதன் மூலம், உங்கள் கைப்பேசி எண் சரிபார்க்கப்படும், அதன் பிறகு உங்கள் வங்கி கணக்கு சம்மந்தப்பட்ட தகவல்கள் சரிபார்க்கப்படும். இது முற்றிலும் தானியங்கி செயல்முறை.
படி 9: சரிபார்ப்பிற்குப் பின், ஒரு புதிய பக்கம் காண்பிக்கப்படும். புதிய வங்கிக் கணக்கை இணைக்க இப்போது ‘யு.பி.ஐ – பின்’ ஐத் தட்டவும்.
படி 10: நீங்கள் ‘யு.பி.ஐ – பின்’ ஐ உள்ளிடுகையில், உங்கள் வங்கிக் கணக்கு கூகிள் பே பயன்பாட்டுடன் இணைக்கப்படும்.
குறிப்பு: யாராவது உங்களுக்கு கூகிள் பே மூலம் பணம் அனுப்பும் போது, அது உங்கள் முதன்மை வங்கி கணக்கிற்கு செல்லும். எனவே நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் விருப்பப்படி ஒரு முதன்மை கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
கூகிள் பேயில் உங்கள் வங்கி கணக்கை மாற்றும் அல்லது நீக்கும் செயல்பாடுகள்:
கூகிள் பேயில் புதிய வங்கி கணக்கைச் சேர்ப்பதைத் தவிர, வங்கிக் கணக்கை எவ்வாறு மாற்றலாம் அல்லது அகற்றலாம் என்பது பற்றி இங்கே நாம் காணலாம். கூகிள் பேயில் நீங்கள் ஒரு வங்கிக் கணக்கைப் புதுப்பிப்பதற்கு முன், முதலில் அதை அகற்றிவிட்டு மீண்டும் சேர்க்க வேண்டும்.
படி 1: ‘கூகிள் பே’ ஐத் திறக்கவும்.
படி 2: மேல் இடதுபுறத்தில், உள்ள உங்கள் புகைப்படத்தைத் தட்டவும்.
படி 3: அதில் வரும் ‘கட்டண முறைகள்’ என்பதைக் கிளிக் செய்க.
படி 4: அதன் பிறகு ‘வங்கி கணக்கு’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (நீங்கள் நீக்க விரும்பும் கணக்கைத் தட்டவும்)
படி 5: ஒரு புதிய பக்கம் இங்கே தோன்றும். அதில் வலது பக்க மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்க.
படி 6: கொடுக்கப்பட்ட விருப்பத்திலிருந்து ‘கணக்கை அகற்று’ என்பதைக் கிளிக் செய்க.
படி 7: ‘இந்த வங்கிக் கணக்குடன் தொடர்புடைய அனைத்து யு.பி.ஐ ஐடிகளும் நீக்கப்படும்’ என்று கேட்கும் புதிய பாப் அப் தோன்றும்.
படி 8: அதில் ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
மேற்கண்ட செயல்முறைகளை பின்பற்றி கூகிள் பேயில் இருந்து உங்கள் வங்கி கணக்கை நீக்கிக் கொள்ளலாம். பின்னர் நாம் முதலில் பார்த்த செயல்பாடுகளை பின்பற்றி புதிய வங்கிக் கணக்கை இணைத்துக் கொள்ளலாம்.
கூகிள் பேயின் நன்மைகள்:
- பணத்தை அனுப்ப, பெற விரைவான மற்றும் எளிதான வழியாக இருக்கிறது.
- பல கேஷ்பேக் மற்றும் வெகுமதி நன்மைகள் இதில் உள்ளன.
- பரிவர்த்தனையைப் பாதுகாக்க கூகிள் குறியாக்கம் மற்றும் பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
- பயன்பாட்டு பில்களை செலுத்துதல், உங்கள் மொபைலை ரீசார்ஜ் செய்தல் போன்ற பல விஷயங்களை இந்த செயலியை பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்தே செய்யலாம்.
- இதன் பயன்பாட்டுக்கான கூடுதல் செலவு என்று எதுவும் இல்லை.
- இதனை வணிக நோக்கத்திற்காகவும் பயன்படுத்தலாம்.
கூகிள் பேயின் தீமைகள்:
- இது சில வங்கி கிரெடிட் கார்டுகளுடன் வேலை செய்யாது.
- எல்லா கடைகளிலும் / இடங்களிலும் கூகிள் பே மூலம் பணம் செலுத்தும் வசதி இருப்பதில்லை.
- கூகிள் பேயில் வாடிக்கையாளர் சேவைகள் திருப்திகரமாக இருப்பதில்லை.
- உங்களுக்கு உதவ என ஆதரவு மையம் சேவைகள் கிடையாது.
- பொருட்களுக்கு பணம் செலுத்த, ஒருவர் தனது கைப்பேசியை இயக்க நிலையில் உடன் வைத்திருக்க வேண்டும்.
- மேலும், மக்கள் தங்களிடம் மெய்நிகர் பண ஆதாரம் இருப்பதை விட அதிக பணம் செலவழிக்க அனுமதிக்கும். இதன் விளைவாக, உங்களிடம் மெய்நிகர் பண ஆதாரம் இருந்தால், மூன்றாம் நபர்கள் உங்கள் பின் எண்ணை தெரிந்து கொண்டு உங்கள் பணத்தை திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஒரு நுகர்வோர் என்ற முறையில், நீங்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் இருக்கும் போது பணம் செலுத்துவதற்கான கூடுதல் வழியை விரும்பினால், கூகிள் பேயை பயன்படுத்துவது நல்ல யோசனையாகும், இந்த சேவையைப் பயன்படுத்த எளிதாக இருக்கும். உங்கள் கட்டண விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க, உங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு வணிகராக, வாடிக்கையாளர்களுக்கு கூகிள் பேயை ஒரு விருப்பமாக வழங்குவது என்பது உங்கள் போட்டியை வெளிச்சம் போட்டுக் கட்ட உதவும் மற்றும் அதிக பரிவர்த்தனைகளுக்கான கதவைத் திறக்கலாம். வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதற்கான விருப்பத்தேர்வுகள் மற்றும் மொபைல் பரிவர்த்தனைகள் போன்றவை தற்போது மிகவும் பிரபலமாகி வருவதால், வாடிக்கையாளர்களை கவர ஒவ்வொரு வணிக நிறுவனமும் கூகிள் பே மூலம் பணம் பெரும் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
கூகிள் பேயில் ஏற்படக்கூடிய மோசடியைத் தவிர்ப்பது எப்படி?
டிஜிட்டல் வாலட் இயங்குதளங்கள் மற்றும் கூகிள் பே போன்ற ஆன்லைன் கட்டண அமைப்புகள் வாடிக்கையாளர்களை கட்டணம் செலுத்தும் முறையை மிகவும் எளிதாக்கியுள்ளன. கூகிள் பே உதவியுடன், பணம் செலுத்துவது ஒரு சிறப்பான மற்றும் எளிமையான வழி ஆகும். கூகிள் பே மூலம், ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை மாற்றுவது, பயன்பாட்டு பில்கள் செலுத்துதல், தொலைபேசிகளை ரீசார்ஜ் செய்வது, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல், வணிகர்களுக்கு பணம் செலுத்துதல், ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது போன்ற பல விஷயங்களை நீங்கள் செய்யலாம். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் இத்தகைய வசதிகள் பயனுள்ளதாக இருந்தாலும், அவற்றின் அபாயங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்தும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே, ஆன்லைனில் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யும் போது கவனமாக இருப்பது மிகவும் முக்கியம்.
ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும் போது ஒரு தவறு செய்தால் நிறைய பணத்தை இழக்க நேரிடலாம். சமீபத்தில், கூகிள் பேயில் பரிவர்த்தனை செய்யும் போது ஒருவர் ரூ .1,00,000 வரை இழந்தார். அவர் தனது வீட்டில் உள்ள அலமாரியை விற்க பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தார். அந்த விளம்பரத்தை பார்த்த பிறகு, அவரிடம் இருந்து அலமாரியை வாங்குவதில் ஆர்வம் காட்டிய ஒருவர், விளம்பரம் செய்தவருக்கு அழைப்பு செய்து தகவல்களை கேட்டறிந்து கொண்டார், மேலும் கூகிள் பே கட்டண நுழைவாயில்கள் மூலம் பணத்தை மாற்ற விரும்புவதாக தெரிவித்து அவருடைய கூகிள் பே தகவல்களை பெற்று, பணம் அனுப்புவதற்கு பதிலாக, பணம் பெற கோரிக்கை அனுப்பி இருந்தார். இதனை சோதனை செய்யாத விளம்பரம் செய்த நபர் தனக்கு பணம் வரப்போவதாக நம்பி அந்த கோரிக்கையை ஏற்றார். இதன் மூலம் அவரது கணக்கில் இருந்து அந்த குறிப்பிட்ட தொகை, மோசடி நபரின் கணக்கிற்கு பரிமாற்றம் ஆகியது. இதுபோன்ற மோசடி நிகழ்வுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள நாம் கூகிள் பேயை பயன்படுத்தும் பொது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.